சுடச்சுட

  

  நாகையை அடுத்த நாகூர் ஆரியநாட்டுத் தெரு, சம்பாத் தோட்டம் பகுதியில் உள்ள படைவீட்டு அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  இக்கோயிலின்  7-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  தொடர்ந்து, அங்குள்ள ஆனந்த விநாயகர் கோயிலிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்ததும், பக்தர்கள் கொண்டுவந்த பாலால் அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai