சுடச்சுட

  

  மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 17) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
  நாகை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, 7 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் வணிகவியல் பட்டதாரிகள் வரையிலான நிலைகளில் உள்ள, படித்த வேலைவாய்ப்பற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குள்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். மாற்றுத் திறனாளிகளும் இந்த முகாமில் பணிக்குத் தெரிவு செய்யப்படுவர்.  முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் சுயவிவரக்குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கொண்டு வர வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் 
  தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai