சுடச்சுட

  

  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ. ராமலிங்கம், பொறையாறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தார்.
  சந்திரபாடி கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தாரை அவர் சந்தித்து பேசியபோது, அப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சாலை வசதிகள் இல்லை என்றும் கூறிய பொதுமக்கள், அவற்றை சரிசெய்து தருமாறு எம்.பி.யிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து பொறையாறு, தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, பிள்ளைபெருமாநல்லூர் , திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற எம்பி ராமலிங்கம், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியின் போது திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சித்திக், அருட்செல்வன், ஒன்றிய  செயலாளர் அப்துல் மாலிக்,  நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai