கிருஷ்ணன் கோயில் பிரமோத்ஸவம்: ஆக. 16-இல் கொடியேற்றம்

நாகை நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயில் பிரமோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை (ஆக. 16) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.

நாகை நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயில் பிரமோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை (ஆக. 16) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.
நாகை செளந்தரராஜப் பெருமாளின் அபிமான தலமாக விளங்குகிறது நாகையில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜயந்தியையொட்டி, பிரமோத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டின் பிரமோத்ஸவம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.  ஆக. 28-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் பல்லக்கு சேவையும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
கால்கோள் விழா...
பிரமோத்ஸவ விழாவின் கால்கோள் விழா கிருஷ்ணன் கோயில் கோபுரவாசலில்  திங்கள்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர், வேத மந்திர  முழக்கங்களுடன் பந்தல் கால் நடப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com