"ஜனநாயகத்தை காக்க உறுதி ஏற்போம்'

சுதந்திர இந்தியாவின் ஜனநாயக தத்துவங்களைப் பாதுகாக்க சுதந்திர தின நாளில் உறுதியேற்போம்  என

சுதந்திர இந்தியாவின் ஜனநாயக தத்துவங்களைப் பாதுகாக்க சுதந்திர தின நாளில் உறுதியேற்போம்  என நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து செய்தி : 
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த விடுதலைப் போராளிகளின் தியாகத்தை அனைவரும் நினைவுகூருவோம்.  தேசத்தந்தை காந்தியடிகள் வலியுறுத்திய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாசாரமே இந்திய ஒற்றுமையைக் கட்டிக்காத்து வருகிறது என்பதை நினைவில் கொள்வோம்.
உலகின் தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தமான இந்தியாவின்  ஜனநாயக தத்துவங்களை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை.  ஜனநாயக மாண்புகளுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய கொள்கைகளுக்கும் எதிரான செயல்பாடுகளை, காந்தியடிகளின் அஹிம்சை வழியில் வீழ்த்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட முன் வர வேண்டும். 
அனைவருக்கும் தடையற்ற கல்வி, சமூகங்களுக்கிடையே பொது ஒற்றுமை, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வாழ்வுரிமை, சுற்றுச்சூழல் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, தூய்மையான வீதிகள் என நாட்டின் நலன் காக்கும் பிரச்னைகளில் அனைவரும் இணைந்து பாடுபட உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com