கோடியக்கரை கோயிலில் 4 சாமி சிலைகள் கொள்ளை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த பழங்கால சிலை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த பழங்கால சிலை மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட 4 சாமி சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. 
கோடியக்கரையில் பழைமை வாய்ந்த கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை இரவு பௌர்ணமி நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்த பிறது. அர்ச்சகர் கல்யாணராமன் கோயில் கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். 
இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் வழக்கமான பூஜை செய்வதற்காக கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் கருவறைக்குள் இருந்த பஞ்சலோகத்தாலான பழங்கால அம்மன் சிலையும், உலோகத்தால் செய்யப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர், இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையை தொடர்ந்து, நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் போலீஸார் துப்பறிந்தனர். தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை ஆய்வு செய்தனர். சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோயில் கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியாக இருப்பதால் கொள்ளையர்கள் எளிதில் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com