முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 2019-2020-ஆம் கல்வியாண்டில் 1 வகுப்பு முதல் கல்லூரி வரையில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
கல்வி உதவித் தொகை பெறுவதற்கான காலவரம்பு தளர்த்தப்பட்டுள்ளதால் கல்யாண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பருவத்  தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கல்வியாண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்ற விதி தளர்த்தப்பட்டு இறுதியாண்டு தவிர பிற ஆண்டுகளுக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். இறுதியாண்டில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகளுக்குள் கோர்ஸ் நிறைவு சான்று சமர்ப்பிக்கும்போது இறுதி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
பிபிஓஆர் நிலையிலான முன்னாள் படை வீரர்களின் தொகுப்பு நிதியிலிருந்து பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கும், முன்னாள் படைவீரர்களின் மனைவி மற்றும் விதவையர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிதியுதவிவையைப் பெற W​W​W.​E​X​W​E​L​E​T​U​T​O​R.​C​OM / EDU SC​H​O​L​A​R​S​H​IP என்ற இணையதளம்  முகவரியில் தங்களது  பகுதியில்  உள்ள இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான  மேலும் விவரங்களை நாகை  மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி முலமாகவோ ( 04365-253042 ) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com