Enable Javscript for better performance
பொது மக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபானக் கடை மூடப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    பொது மக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபானக் கடை மூடப்பட்டது

    By DIN  |   Published on : 24th August 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது மக்களுக்கு இடையூறாக இருந்த மங்கைமடம் அரசு மதுபானக் கடை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. 
    திருவெண்காடு அருகே மங்கைமடம் - திருநகரி சாலையில் இயங்கி வந்த மதுபானக் கடை பொது மக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுத்துவதாக இருந்தது. இக்கடையில், மது குடிப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே, இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென, மங்கைமடம் பகுதி பொது மக்கள், பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாரதியிடமும், திருவெண்காடு காவல் நிலையத்திலும் மனு கொடுத்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
    இதுகுறித்து, எம்.எல்.ஏ. பாரதி மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில், திருவெண்காடு காவல் ஆய்வாளர் சதீஷ் அந்த மதுபானக் கடையில் ஆய்வு செய்து, பொது மக்களுக்கு இடையூறாகவும், அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் இந்த மதுபானக் கடையை அகற்றுவது அவசியம் என சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார். 
    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் உத்தரவுபடி வெள்ளிக்கிழமை முதல் மங்கைமடம் மதுபான கடை மூடப்பட்டது. இதனால், பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். கடையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் பாரதி, காவல் ஆய்வாளர் சதீஷ், வருவாய்த் துறை உள்ளிட்டவர்களுக்கு பொது மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டன. 
    மதுபானக் கடை மூடியதைத் தொடர்ந்து, இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், நாகை மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ராமசந்திரன் ஆகியோர் தனித் தனியாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai