Enable Javscript for better performance
வளர்ச்சி பணி: மத்திய அரசு அதிகாரி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி ஒன்றியத்துக்குள் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
    மத்திய நீர் மேலாண்மை திட்ட  கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலருமான சஞ்சீவ்பட்ஜோஷி சீர்காழி ஒன்றியத்துக்குள்பட்ட விளந்திரசமுத்திரம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டு, ஊராட்சி முழுவதும் உள்ள நூலக கட்டடம், நியாயவிலை கட்டடம், பள்ளிக் கட்டடம், சமுதாயக் கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அறிவுருத்தினார். 
    தொடர்ந்து, ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் செல்லியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டுஆய்வு செய்தார்.
    பின்னர், பொது மக்களிடம் தங்களது குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டுமெனவும், கிராமபுறத்திலுள்ள அனைவரும் பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். 
    தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்டங்களை ஊரக தூய்மை கணக்கெடுத்தல் மூலம் தரவரிசை படுத்துவதற்கான பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். 
    ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், மத்திய நீர்வள ஆணைய துணை இயக்குநர்கள் கிரிதரன், தரம்வீர்சிங், சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கஜேந்திரன்,ரெஜினாராணி ஆகியோர்உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai