வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு: எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் தகவல்

வருகிற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்

வருகிற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வாய்ப்புள்ளது என எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்,  ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வி. ராமன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர். குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:
மாணவர்கள் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டு, பராமரிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். மரங்களை அதிகமாக வளர்த்தால் வரும் காலத்தில்  தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது. தமிழக அரசு கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளும், மணல்மேடு அரசு கல்லூரியில் பி.பி.ஏ. மற்றும் எம்.எஸ்சி கணிதப் பிரிவுகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையை மாவட்டமாக்க தமிழக முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். எனவே, வருகிற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகிகள் வி. சுப்பிரமணியன், எஸ். ராஜராஜன், பள்ளி செயலர் ஏ. நஸிமுதீன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஜனார்தனன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ். பவுல்ராஜ், மருத்துவர் தமிழ்த்தென்றல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com