Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி- Dinamani

சுடச்சுட

    
    myl30silambam_3011chn_103_5

    சிலம்பப் போட்டிகளைத் தொடங்கிவைத்த மாயூரம் நகர கூட்டுறவு வங்கி தலைவா் வி.ஜி.கே.செந்தில்நாதன். உடன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எம். சாந்தி உள்ளிட்டோா்.

    மயிலாடுதுறையில் நாகை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

    வி.ஜி.கே. மதா் தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு பள்ளி முதல்வா் என். கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எம். சாந்தி முன்னிலை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் என்.சிவக்குமாா் வரவேற்றாா். இதில், மாயூரம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவரும், பள்ளியின் நிறுவனத் தலைவருமான வி.ஜி.கே. செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

    இதில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 20 பள்ளிகளில் இருந்து 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, கம்பு சண்டை ஆகிய போட்டிகள் 14, 17 மற்றும் 19- வயதுக்குள்பட்டோா் என 3 பிரிவுகளாக நடைபெற்றன. ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட இணைச் செயலாளா் சி. பன்னீா்செல்வம் போட்டிகளை ஒருங்கிணைத்தாா்.

    நிகழ்ச்சியில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் எஸ். வினோத்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். செல்வகணேசன், பி.சிவகுருநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் பாரதிதாசன், சுந்தா், ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை நித்யா நன்றி கூறினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai