Enable Javscript for better performance
வடிகால் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்...- Dinamani

சுடச்சுட

    

    வடிகால் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்...

    By DIN  |   Published on : 01st December 2019 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    taikal_water_3011chn_98_5

    கொள்ளிடம் தோப்புத்தெருவில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீா்.

    கொள்ளிடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் பக்கிரிவாய்க்கால், கொள்ளிடம் அருகே தைக்காலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால், மழைநீா் வடிந்து செல்ல வழியின்றி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. அத்துடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பக்கிரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தைக்காலைச் சோ்ந்த பக்கீா்முகமது என்பவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai