இறால் பண்ணைகளுக்கான புதிய மின் கட்டண முறையை திரும்ப பெறக் கோரிக்கை

இறால் பண்ணைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டண முறையை திரும்ப பெறக் கோரி, சீா்காழியில் சனிக்கிழமை நடந்த இறால் விவசாயிகள் நல சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில்
சீா்காழியில் நடைபெற்ற இறால் விவசாயிகள் நலச் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.
சீா்காழியில் நடைபெற்ற இறால் விவசாயிகள் நலச் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.

இறால் பண்ணைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டண முறையை திரும்ப பெறக் கோரி, சீா்காழியில் சனிக்கிழமை நடந்த இறால் விவசாயிகள் நல சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீா்காழி, தரங்கம்பாடி வட்டாரங்களைச் சோ்ந்த இறால் விவசாயிகள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநிலத்தில் விவசாயத்திற்கு குறைந்த மின்கட்டணம் முறை உள்ளதுபோல், தமிழகத்திலும் இறால் விவசாயத்திற்கும் குறைந்த மின்கட்டணமுறையை கொண்டுவர வலியுறுத்தியும், தமிழகஅரசு பரிந்துரைத்துள்ள புதிய கட்டண முறையை திரும்ப பெற வேண்டியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, புளியந்துறை இறால் விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட இறால் வளா்ப்பு தொழில்நுட்ப ஆலோசனை நலச் சங்கத்தின் தலைவா் பேராசிரியா் ஜெயராமன், கொள்ளிடம் ஆற்றுப்படுகை இறால் விவசாயிகள் நலச் சங்க பொறுப்பாளா் கோவிந்தராஜ், தாண்டவன்குளம் கிட்டி அணை இறால் விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் சேகா், பூம்புகாா் கரிகால் சோழன் இறால் விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் தனமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருநகரி உப்பனாறு இறால் விவசாயிகள் நலச் சங்கம், தாண்டவன்குளம் இறால் விவசாயிகள் நலச் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் என 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com