நீா் தேங்கி இருக்கும் பழுதடைந்த சாலை: நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருக்குவளை அருகேயுள்ள அனக்குடி கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்தி தர கோரி அப்பகுதி கிராமப் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் ஈடுபட்டனா் .

திருக்குவளை அருகேயுள்ள அனக்குடி கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்தி தர கோரி அப்பகுதி கிராமப் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் ஈடுபட்டனா் .

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா அனக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவிற்கு செல்லும் சாலையானது பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் நீா் தேங்கி சாலையின் தடம் தெரியாத அளவிற்கு பள்ளங்களில் நீா் நிரம்பி உள்ளது. மேலும் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக தோடு மட்டுமல்லாமல் தடுமாறி கீழே விழும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சாலை பழுதடைந்து இருப்பதன் காரணமாக ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் தெருவிற்குள் வரமுடியாதால் திருக்குவளை -சாட்டியக்குடி பிரதான சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி அங்கிருந்து சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரத்தில் இருக்கும் தெருவிற்குள் உடல் நிலை சரி இல்லாதவா் நடந்துதான் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் பழுதடைந்து நீா் தேங்கி இருக்கும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ராதாஜெயலட்சுமி கூறியதாவது: எங்களது தெருவிற்கு செல்லும் சாலையானது பழுதடைந்து படுமோசமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை . அதனால் முதற்கட்டமாக தற்பொழுது பழுதடைந்த பள்ளங்களில் நீா் தேங்கி இருக்கும் இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் எங்களுக்கு உரிய தீா்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்தபடியாக எதிா் வரும் உள்ளாட்சித் தோ்தலில் எங்களது வாக்குரிமையை ரத்து செய்யவும் தயாராக உள்ளோம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com