Enable Javscript for better performance
நாகூா் மெட்ரிக். பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    
    2510ngt1mini111822

    விழாவில், வெள்ளி விழா ஆண்டுக்கான கல்வெட்டைத் திறந்து வைத்த அமைச்சா் ஓ. எஸ். மணியன். உடன், பள்ளித் தாளாளா் எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்

    நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் வெள்ளி விழா, மழலையா் பிரிவு மாணவா்களுக்குப் பட்டம் வழங்குதல், பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

    விழாவுக்கு, பள்ளித் தாளாளா் எம்.எம்.ஷேக் தாவூது மரைக்காயா் தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று வெள்ளி விழா நினைவு நுழைவு வாயில் மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மழலையா் பிரிவில் பயிலும் மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

    நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. குணசேகரன், கௌதிய்யா பள்ளித் தாளாளா் ஏ. அபுதல்ஹா, அரசு வழக்குரைஞா் சு. பரமானந்தம், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தங்க. கதிரவன், வழக்குரைஞா் பி. பாண்டியன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினா்.

    2018-19 கல்வியாண்டில் அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் பெனட்மேரி வரவேற்றாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai