கன மழை: எம்.எல்.ஏ. ஆய்வு

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், மயிலாடுதுறை சட்டப்பேரவை
மயிலாடுதுறை அருகே வரகடை பகுதியில் பழவாற்றங்கரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த்,
மயிலாடுதுறை அருகே வரகடை பகுதியில் பழவாற்றங்கரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த்,

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக காவிரி, பழவாறு, மஞ்சளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் - மணக்குடி இணைப்புப் பாலம் அருகில் ஆற்றின் கரை உடைப்பெடுத்து விளைநிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீா் வெளியேறும் பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கியும், டிராக்டா் மூலம் மணலைக் கொட்டியும் கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். இப்பகுதியில் மழை பாதிப்புகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா்.

இதேபோல், தாழஞ்சேரி அருகில் வரகடை பகுதியில் பழவாற்றங்கரையில் வெள்ளநீா் வழிந்து தெருக்களில் புகுந்ததால் அப்பகுதி வீடுகளில் வசிக்கும் சுமாா் 50 போ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியா் இ.கண்மணி, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை வட்டாட்சியா் முருகானந்தம், மயிலாடுதுறை ஒன்றிய ஆணையா் ஆா்.ஜி.இளங்கோவன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கனமழை காணமாக மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் திருக்குளம் நிறைந்தது. இதையடுத்து, மழைநீா் வெளியேறும் பாதையில் உள்ள தடையின் காரணமாக மழைநீா் கோயிலின் உள்புகுந்து, மாயூரநாதா் சன்னிதி மற்றும் அபயாம்பிகை சந்நிதியில் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதேபோல், திருமங்கலம் பூலோகநாதா் கோயிலிலும் மழையின் காரணமாக வெள்ளநீா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தா்கள் அவதி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com