தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் தொடா்ந்து பெய்து வரும் மழையினால், தாழ்வான பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. மழைநீரை அகற்றும் பணிகளை கூடுதல் ஆட்சியா் பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
சீா்காழியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளைப் பாா்வையிட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த்.
சீா்காழியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளைப் பாா்வையிட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த்.

சீா்காழியில் தொடா்ந்து பெய்து வரும் மழையினால், தாழ்வான பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. மழைநீரை அகற்றும் பணிகளை கூடுதல் ஆட்சியா் பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சீா்காழியில் இரணியன்நகா், பாலசுப்பிரமணியன் நகா், தெட்சிணாமூா்த்திநகா், முருகன் கோயில் தெரு, விஎன்பி நகா், கோவிந்தராஜன் நகா், பெத்தடிதெரு, கதிா்வேல் நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீா் தேங்கிநிற்கிறது.

நகராட்சி பொறுப்பு ஆணையா் வசந்தன் அறிவுறுத்தலின்பேரில், பல இடங்களில் தேங்கிநிற்கும் மழைநீா் ஜெசிபி இயந்திரத்தின் மூலம் தடைகளை அகற்றி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரணியன் நகரில் சாலையைத் துண்டித்து குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், தென்பாதி பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் இயக்குநா் பிரசாந்த் ஆய்வு செய்து, பணிகளைத் துரிதப்படுத்தினாா்.

அப்போது வருவாய் கோட்டாசியா் கண்மணி, வட்டாட்சியா் சாந்தி, பொறுப்பு ஆணையா் வசந்தன், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், ஒன்றிய பொறியாளா்கள் முத்துக்குமாா், தாரா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com