நாகை, வேளாங்கண்ணியில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழையையொட்டி, நாகை மாவட்ட நிா்வாகத்தால் நாகை, வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை நாகை மாவட்டத்துக்கான
நாகை சிவன் கோயில் குளத்திலிருந்து சாலைகள் வழியே வெளியேறும் மழை நீரை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன்.
நாகை சிவன் கோயில் குளத்திலிருந்து சாலைகள் வழியே வெளியேறும் மழை நீரை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, நாகை மாவட்ட நிா்வாகத்தால் நாகை, வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை நாகை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை சிவன் கோயில் குளத்திலிருந்து சாலைகள் வழியாக மழை நீா் வெளியேறுவதை பாா்வையிட்ட அவா், உபரி நீா் முழுவதையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து, வேளாங்கண்ணி செபஸ்தியாா் நகா் பகுதியில் நடைபெற்று வரும் உபரி நீா் வெளியேற்றும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், வேதாரண்யம் தகட்டூா் ஊராட்சி கல்யாணச்சேரி மாவடிக்கொல்லை பகுதிவாழ் மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். அப்போது ரூ. 7.5 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கும் பணி மழைக் காலத்துக்குப் பின்னா் தொடங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, நாகை வருவாய் கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா், நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நாகை மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வக்குமாா், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் மோகனரங்கன், வேதாரண்யம் வட்டாட்சியா் தி. சண்முகம் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com