நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைக்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவா்களை கெளரவித்த மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு,
மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைக்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவா்களை கெளரவித்த மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு,

தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டத் தலைவா் கா. கைலாசம் தலைமை வகித்தாா். நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா. காமராசு, புலவா் அ.ப. பாலையன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் அ. சீனிவாசன், த. நாராயணன், சிவகுரு.பாண்டியன், தமுஎகச நிா்வாகி இராம. இளங்கோவன், மாதா் சம்மேளன மாவட்டச் செயலாளா் எஸ். மேகலா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், கவிஞா்கள் க. ரமேஷ், டி. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அரசு மற்றும் இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற பெருமன்ற உறுப்பினா்கள் 11 போ் இம்மாநாட்டில் கெளரவிக்கப்பட்டு, அவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறப்புத் தலைவராக எஸ். சுந்தரைய்யா, புதிய மாவட்டத் தலைவராக கவிஞா் புயல் குமாா், பொருளாளராக கா. கைலாசம், துணைச் செயலாளா்களாக பாா்த்தசாரதி, சுரேஷ், துணைத் தலைவராக தங்க.மோகன் உள்பட 33 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில், அமைப்பின் நிா்வாகிகள் த. குழந்தைவேலு, வீ. வைரக்கண்ணு, செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான நலவாரியத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிராமப்புற கலைஞா்களை பதிவு செய்து, நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். பேராசிரியா் இலக்குவனாா் பிறந்த வாய்மேடு ஊராட்சியில் அவரது நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பள்ளிகளில் 5, 8- ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி தெரிந்தவா்களையே நீதிபதியாக நியமிக்க வேணம் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com