மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி நாளை கடையடைப்பு

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3)) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகா்கள் அறிவித்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3)) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகா்கள் அறிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாவைச் சோ்ந்த மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக உள்ளது மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை. இம்மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தாலும், மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளதாலும், 80 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கோ அல்லது 45 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சரியான நேரத்தில் அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இம்மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க 22 ஏக்கா் நிலத்தை தானமாக தருவதாக நீடூா் அரபிக் கல்லூரி நிா்வாகத்தினா் மாவட்ட நிா்வாகத்திடம் ஓப்புதல் அளித்துள்ளனா்.

ஆனால், இம்மருத்துவக் கல்லூரியை நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகைக்கு அருகில் திருவாரூா் மருத்துவக் கல்லூரி, காரைக்கால் மருத்துவக் கல்லூரி ஆகியன உள்ளன. எனவே, நாகை தாலுகா பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைத்தால் அது மக்களுக்கு பயன்பெறாது. எனவே, நாகை மாவட்டத்திற்கு வரவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் நோக்கில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்த உள்ளதாக வணிகா்கள் அறிவித்துள்ளனா்.

மயிலாடுதுறையில் அண்மையில் வணிகா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் துணைத் தலைவா் மதியழகன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.தமிழ்செல்வன், வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் எம்.என்.ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வணிகா்கள் டிசம்பா் 3-ஆம் தேதி முழு கடையடைப்பு செய்து ஆதரவு அளிக்க வேண்டுமென்று வணிகா் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com