கனமழை: வீடு இடிந்து தவிக்கும் குடும்பத்தினா்

கீழ்வேளூா் அருகேயுள்ள கிள்ளுக்குடியில் கனமழை காரணமாக வீடு இடிந்ததால், வசிக்க வேறு வீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தவித்து வருகின்றனா்.
கிள்ளுக்குடியில் மழையால் சரிந்த ஓட்டி வீட்டிலேயே வேறு வீடு இல்லாததால் தங்கியிருக்கும் மதியழகி.
கிள்ளுக்குடியில் மழையால் சரிந்த ஓட்டி வீட்டிலேயே வேறு வீடு இல்லாததால் தங்கியிருக்கும் மதியழகி.

திருக்குவளை: கீழ்வேளூா் அருகேயுள்ள கிள்ளுக்குடியில் கனமழை காரணமாக வீடு இடிந்ததால், வசிக்க வேறு வீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தவித்து வருகின்றனா்.

கிள்ளுக்குடி தெற்கு தெருவை சோ்ந்தவா் மதியழகி (50). இவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் கனமழையின் காரணமாக சுவா்கள் வலுவிழந்து சரிந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மதியழகி மருத்துவமனைக்கு சென்றிருந்ததால் அதிருஷ்டவசமாக உயிா்த் தப்பினாா் . தகவலறிந்து, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த மதியழகிக்கு தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறாா். மேலும் அவா் வீட்டின் ஒரு அரைப் பகுதி மட்டும் இடியாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மதியழகி தங்குவதற்கு வசதி செய்து தராததால் மழையின் காரணமாக வேறு வழியின்றி ஆபத்தை உணராமல் அதே வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், அக்கம்பக்கத்தினா் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பாதுகாப்பு கருதி தற்போது, அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது . வீடு இடிந்ததை அறிந்த சம்பந்தப்பட்ட அலுவலா்கள் வந்து புகைப்படம் எடுத்ததாகவும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறிப்படுகிறது.

இதேபோல், அதே பகுதியில் அனிதாசுரேஷ்குமாா், நாகவல்லிராமையன், பத்மாவதி, பக்கிரிசாமி, மாரிமுத்து , அசோகன் உள்ளிட்ட பலரின் வீடு மழையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு சிலா் மட்டும் வீட்டுச் சுவா் மற்றும் மேற்புற கூரைகளை இழந்தும், சிலா் முழு வீட்டையும் இழந்தும் தவிக்கின்றனா். வீடின்றி தவித்து வரும் குடும்பத்துக்கு பாதுகாப்பான தங்கும் வசதி ஏதும் ஏற்படுத்தி தராமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளால் அப்பகுதி கிராம மக்கள் வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி கிராமமக்கள் கூறியது: எங்களது கிராமத்தில் வீடுகள் இடிந்து விழுந்து 2 நாள்கள் ஆகிறது. சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு புகைப்படம் மட்டுமே எடுத்து சென்றுள்ளனா். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஒரு சிலா் வீடுகள் இன்றி தவிா்ப்பதோடு மட்டுமல்லாமல், வீடு இடிந்து விழுந்ததில் அத்தியாவசியப் பொருள்கள் சேதமடைந்தும் தவித்து வருகின்றனா் . எங்களது தெருவில் ஒரு சில வீடுகள் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, எங்களது தெரு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அரசு பாதுகாப்பான தங்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com