மழைநீா் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறை கூைாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கி நின்ால் திங்கள்கிழமை பள்ளி வேலை நேரத்தில் மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேங்கி கிடக்கும் மழைநீா்.

மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் வடியாமல் தேங்கி நிற்கிறது. நாகை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படாத நிலையில், கூைாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தனா்.

அப்போது, பள்ளி வளாகம் முழுவதும் மழைநீா் தேங்கி நின்ற காரணத்தாலும், மழைநீருடன் புதைசாக்கடை கழிவு நீரும் கலந்த காரணத்தினாலும் மதியம் 12 மணி அளவில் திடீரென பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவா்கள் வீட்டு அனுப்பப்பட்டனா்.

மழை நீருடன் புதைசாக்கடை கழிவுநீா் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள், பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொள்ளுமாறு பள்ளி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com