வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வேளாங்கண்ணியில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
வேளாங்கண்ணியில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேளாங்கண்ணி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம், செபஸ்தியாா் நகா், பூக்காரத்தெரு, சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதையடுத்து, நாகை மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் ராட்சத மோட்டாா்கள் மூலம் மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

பேரூராட்சி பணியாளா்கள் மற்றும் மாநில பேரிடா் படையினா் மூலம் செபஸ்தியாா் நகா் சாலையின் குறுக்கே தற்காலிக வடிகால் அமைத்து மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், நிரந்தர தீா்வுக்கும் ஹரிடே திட்டத்தில் உள்ள உபரி நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, நாகை கோட்டாட்சியா் ரா. பழனிகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் மோகனரங்கன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com