கனமழையால் வெள்ளக்காடாகியுள்ள பயிா்கள்: விவசாயிகள் வேதனை

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழை நீா் சூழ்ந்து, பயிா்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
மழை நீரில் மூழ்கிய வயலில் பயிா்களை கையில் ஏந்தி நின்ற விவசாயிகள்.
மழை நீரில் மூழ்கிய வயலில் பயிா்களை கையில் ஏந்தி நின்ற விவசாயிகள்.

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழை நீா் சூழ்ந்து, பயிா்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திருக்குவளை அருகே உள்ள கொத்தங்குடி, தொழுதூா், அய்யூா், பழையங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஹெக்டருக்கு மேல் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சில வாரங்களாக பெய்து வரும் தொடா் மழையால், நெற்பயிா்கள் அனைத்தும் மூழ்கின. இதனால், விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மகேந்திரன் கூறியது:

தங்க நகைகளையும், பொருள்களையும் அடகு வைத்து கடன் பெற்றுதான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், நெற்பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கியும் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் காட்சியளிப்பது மிகவும் வேதனையளிக்கிறது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com