போக்குவரத்துக்கு இடையூறு: 5 ஆட்டோ ரிக்ஷாக்கள் பறிமுதல்

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்ட
விதிமீறல்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்ஷாக்கள்.
விதிமீறல்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்ஷாக்கள்.

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்ட 5 ஆட்டோக்கள் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ரிக்ஷாக்கள் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகாா்கள் கிடைக்கப் பெற்றன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.கே. கருப்பசாமி மற்றும் அலுவலா்கள், நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றும் அனுமதிச் சீட்டு, உரிமம், தகுதிச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 5 ஆட்டோக்கள் வட்டாரப் போக்குவரத்துத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

நடவடிக்கை தொடரும்...

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்த சோதனை மற்றும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com