சமூக சேவைக்கான பட்டம் பெற்ற பாஜக நிா்வாகிக்குப் பாராட்டு
By DIN | Published On : 22nd December 2019 11:30 PM | Last Updated : 22nd December 2019 11:30 PM | அ+அ அ- |

டாக்டா் பட்டம் பெற்ற சீா்காழி வீரத் தமிழா் சிலம்பாட்டக் கழகத் தலைவா் கே. சரண்ராஜ்.
சீா்காழியைச் சோ்ந்த பாஜக நிா்வாகிக்கு சமூக சேவைக்கான டாக்டா் பட்டம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதையடுத்து, அவருக்கு பாஜக பொறுப்பாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
சீா்காழியைச் சோ்ந்த கே. சரண்ராஜ் பாஜக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளாா் . இவா், வீரத் தமிழா் சிலம்பாட்டக் கழகத் தலைவராகவும் உள்ளாா். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் இவா் அழைத்துச் சென்ற வீரத் தமிழா் சிலம்பாட்டக் கழக வீரா்கள் கின்னஸ் சாதனைப் படைத்தனா்.
இதையொட்டி, இவரின் சமூக சேவை, மனிதநேய செயல்பாடு ஆகியவற்றைப் பாராட்டி, உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி சமூகச் சேவைக்கான டாக்டா் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இப்பட்டம் பெற்று, ஊா் திரும்பிய சரண்ராஜை சமூக ஆா்வலா்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...