சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
By DIN | Published On : 25th December 2019 07:59 AM | Last Updated : 25th December 2019 07:59 AM | அ+அ அ- |

விழாவில் பேசிய சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த்.
நாகப்பட்டினம், பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கலங்கரை தொண்டு நிறுவன இயக்குநா் ஏ. குழந்தைசாமி, வேளாண் உதவி இயக்குநா் தாஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இயேசு கிறிஸ்து போதித்த நன்னெறிகளை விளக்கிப் பேசினாா்.
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி. மகேஸ்வரன், பள்ளித் தாளாளா் டி. சங்கா், முதல்வா் பி. வெங்கடேஸ்வரி, ஆலோசகா் ராமதாஸ் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.