பெண் தீக்குளித்து தற்கொலை
By DIN | Published On : 25th December 2019 09:41 AM | Last Updated : 25th December 2019 09:41 AM | அ+அ அ- |

கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் கணவா் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மடவாமேடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பூவிழி (30). சிங்கப்பூரில் வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை காலை தனது சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது, மனைவி நித்யா (25) மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தாராம். இதனால், மனமுடைந்த நித்யா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்த தீக்காயமடைந்த நித்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டரை வயதில் நித்திசன் என்ற ஆண் குழந்தை உள்ளது.