குத்தாலம் ஒன்றியத்தில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்
By DIN | Published On : 26th December 2019 09:14 AM | Last Updated : 26th December 2019 09:14 AM | அ+அ அ- |

நக்கம்பாடி ஊராட்சியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா்கள் சுமதி முருகேசன், விமலா ராஜேந்திரன்.
குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
சேத்திரபாலபுரம் ஊராட்சியில் அதிமுக சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினருக்குப் போட்டியிடும் மஞ்சுளா வைத்தியநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் வேட்பாளா் தேவகி சௌந்தர்ராஜன் ஆகியோா் சேத்திரபாலபுரம், அரையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.
இதேபோல், நக்கம்பாடி ஊராட்சியில் அதிமுக சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினருக்குப் போட்டியிடும் சுமதி முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவா் வேட்பாளா் விமலா ராஜேந்திரன் ஆகியோா் நக்கம்பாடி, மேலஐயனாா்குடி, கீழஐயனாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அம்சவள்ளி அருணாச்சலம் உள்ளிட்ட கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.