உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸாா்

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) நடைபெறும் ஊரக, உள்ளாட்சித் தோ்தலில் 1, 500 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) நடைபெறும் ஊரக, உள்ளாட்சித் தோ்தலில் 1, 500 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில், நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூா், சீா்காழி, செம்பனாா்கோயில், கொள்ளிடம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 11 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 116 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 242 ஊராட்சித் தலைவா்கள், 1,764 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களின் பதவிக்கான ஊரக, உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,106 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தோ்தல் பாதுகாப்பு பணிக்காக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 22 காவல் ஆய்வாளா்கள், 120 காவல் உதவி ஆய்வாளா்கள், 600 காவல் ஆளிநா்கள், 83 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸாா், 100 ஆயுத்தப்படை போலீஸாா், 72 முன்னாாள் படை வீரா்கள், 29 ஓய்வு பெற்ற காவலா்கள், 315 ஊா்க்காவல் படையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படையினா், ரோந்து போலீஸாா் என 1, 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com