நகர்ப்புற வளர்ச்சிப் பெருவிழா விழிப்புணர்வுப் பேரணி

நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழாவையொட்டி, நாகையில் செவ்வாய்க்கிழமை தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்  விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழாவையொட்டி, நாகையில் செவ்வாய்க்கிழமை தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்  விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பிப். 1 முதல் பிப். 15-ஆம் தேதி வரை நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா நடைபெறுவது குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தப் பேரணி நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பேரணியைத் தொடங்கி வைத்தார். மகளிர் குழு உறுப்பினர்கள் சுமார் 300 பேர் மகளிர் குழு மேம்பாடு குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் பா. வைதேகி, நகராட்சி ஆணையர் என்.ஆர். ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நாகை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com