சுடச்சுட

  

  மயிலாடுதுறை அருகே நீடூர் கடுவங்குடியில் உள்ள தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் 'தமிழ்நாட்டில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கல்லூரியின் தலைவர் ஏ. ரபியுதீன் தலைமை வகித்தார். இயக்குநர் எஸ். முத்துக்குமார் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியை பா. ராஜலெட்சுமி வரவேற்றார். கருத்தரங்கில் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி பேராசிரியர் வி. வில்லவன் பங்கேற்று, "தமிழ்நாட்டில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரை
  நிகழ்த்தினார்.
  இதில் கல்லூரி துணை முதல்வர் வி. சங்கீதா மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட  மாணவிகள் கலந்துகொண்டனர். ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.ஜெரினா பர்வீன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai