சுடச்சுட

  

  சீர்காழி அருகே உள்ள எருக்கூரில் ரூ.64. 27 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவீன நெல் சேமிப்பு கொள்கலன்கள், பரிசோதனை அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பயனற்றுக் கிடக்கின்றன.
  எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இதன் வளாகத்தில் கூடுதலாக நெல்லைப் பாதுகாக்கும் வகையில், நபார்டு வங்கி நிதியுதவியுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.64.27 கோடி மதிப்பீட்டில், 16 நவீன நெல் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் திறக்கப்பட்டன. ஒவ்வொரு கொள்கலனும் 3,125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டது. 16 கொள்கலன்களிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை இருப்பு வைக்க முடியும்.
  நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, இயந்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டு, அனைத்து கொள்கலன்களிலும் நவீன தொழில்நுட்பத்துடன் பராமரிக்கப்பட்டு, பின்னர் ஊறவைத்து, உலரவைத்து அரிசியாக்கப்படும் முறையில் இந்த நவீன கொள்கலன்கள் வடிவமைக்கப்பட்டன.
  இந்த கொள்கலன்களில் வெறும் 6 ஆயிரம் டன் நெல் சோதனைக்காக 4 மாதங்களுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு, மீண்டும் தண்ணீரில் ஊறவைத்து உலர வைத்து, பின்னர் அரைவை செய்து, அரிசியாக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளுக்கும், மாதிரிக்கும் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.
  இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக அனைத்து கொள்கலன்களும் பயனற்றுக் கிடக்கின்றன. இதனால், கொள்முதல் நிலையங்கள் மூலம் பல இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் பழைய குடோன்களிலும், குடோன்களுக்கு வெளியேயும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 
  எனவே, புதிய நவீன நெல் கொள்கலன்களில் உள்ள குறைபாட்டைக் கண்டறிந்து களையவும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
  விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai