சுடச்சுட

  

  திருக்கண்ணபுரத்தில் அருள்மிகு சௌரி ராஜபெருமாள் கோயிலில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
  திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌரி ராஜபெருமாள் திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழா தொடங்கியுள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து, பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடும், பிப்ரவரி 17-ஆம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும், பிப்ரவரி 19- ஆம் தேதி மாசி மக திருவிழா நிகழ்ச்சியும், பிப்ரவரி 24-ஆம் தேதி தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கா. பரமானந்தம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai