சுடச்சுட

  

  ஆறுகாட்டுத்துறையில் தூண்டில்முள் வளைவு அமைக்க ஆய்வு

  By DIN  |   Published on : 13th February 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பான ஆய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தூண்டில்முள் வளைவு அமைப்பது தொடர்பாக முதல் கட்ட ஆய்வுப் பணிக்காக தமிழக அரசு ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. ஆய்வு குழுவினர், ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் கடற்கரைப் பகுதி, ஆற்று முகத்துவாரம் ஆகியவற்றை பார்வையிட்டு மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
  ஆய்வு பணியின்போது, மீன்வளத் துறை முதன்மை பொறியாளர் ராமநாதன், கடல் ஆராய்ச்சியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai