சுடச்சுட

  

  காதலர் தினத்துக்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th February 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம் முழுவதும் காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
  காதலர் தினம் என்ற பெயரில் பிப்ரவரி 14 -ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆபாச கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இதேபோல், நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
  தமிழகத்தில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai