சுடச்சுட

  

  நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற  7  பெண்கள் உள்ளிட்ட 39 பேரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  கீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின்பேரில், காவல் உதவி கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், செந்தில்குமார், சுப்பிரமணியன், செல்வி, சிவராஜ் ஆகியோரது தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த  தனிப்படை போலீஸார் கீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட பெருங்கடம்பனூர், கோகூர், ஊர்குடி, தேவூர்உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டு, 7  பெண்கள் உள்ளிட்ட 39 பேரை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai