சுடச்சுட

  

  சீர்காழியில் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
  இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இயந்திரத்தை இணைத்துள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் நாம் வாக்களித்த சின்னம் பதிவான துண்டு சீட்டை 7விநாடிகள் பார்க்கலாம். இந்த இயந்திரம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  அதன்படி, சீர்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் வரும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் வட்டாட்சியர் இரா.சங்கர் தலைமையில் நடைபெற்றது. மண்டல  துணை வட்டாசியர்கள் பாபு, சுவாமிநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜரத்தினம், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai