சுடச்சுட

  

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
  ஹெல்பேஜ் இந்தியா திட்ட மேலாண்மை அலகுத் தலைவர் வேணுகோபால் ராமலிங்கம், முதியோர்களுக்கான முதியோர் அமைப்பின் இயக்குநர் இளங்கோ ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை அலுவலர் தயாளன், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். 
  பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முதியோர் நல இயக்கத் தலைவர் அருணாசலம் வரவேற்றார். தொண்டு நிறுவன திட்ட மேலாளர் குகன் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai