சுடச்சுட

  

  மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை வங்கிக் கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்றது. 
  தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்திற்கு, விண்ணப்பங்கள் பெறும் முகாம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் கோ. தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. 
  இதில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் இந்திரஜித் கலந்து கொண்டு சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய 4 தாலுகா பகுதியைச் சேர்ந்த 84 பேர் கடன் கேட்டு விண்ணப்பித்தனர்.
  இதில் தகுதி உடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் காமராஜ், மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai