சுடச்சுட

  

  நாகை மாவட்டம், திருக்குவளை அருகே வெண்மணச்சேரியில் உள்ள திருக்கோயில்களில் கலசங்கள் புதுப்பித்து மறு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  திருக்குவளை அருகே வெண்மணச்சேரியில் உள்ள கோயில்களில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அண்மையில் வீசிய கஜா புயலினால் கோயில் கலசங்கள் சேதம் அடைந்தன. தற்போது, சேதமடைந்த கோயில் கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோயில்களுக்கு வர்ணப்பூச்சு செய்யப்பட்டு மறு மகாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  இப்பகுதியில், உள்ள படபத்திரகாளியம்மன், முதலியப்ப அய்யனார், குறவன் மற்றும் சிவன் கோயில்களில் காலை யாகசாலை  பூஜை நிறைவு பெற்றதும் அங்கிருந்து கடம் புறப்பட்டு காலை 9.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ரத்தினசபாபதி வகையறா மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai