விடுபட்டவர்களுக்கு உடனடியாக புயல் நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

வேதாரண்யம் அருகேயுள்ள தாணிக்கோட்டகம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

வேதாரண்யம் அருகேயுள்ள தாணிக்கோட்டகம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்டு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
தாணிக்கோட்டகம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலர் என். வடுகையன் தலைமை வகித்தார். 
தாணிக்கோட்டகம்  ஊராட்சியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு வீடுகள் பாதிப்புக்காக அரசு அறிவித்த நிவாரணத்தொகை, நிவாரணப் பொருள்கள் கிடைக்காததைக் கண்டித்தும், பட்டியல் தயாரிப்பில் நேர்ந்த குளறுபடியால் விடுபட்டவர்களுக்கு இனியும் தாமதிக்காமல் நிவாரணத்தை வழங்க வேண்டும்,  கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி அரசே வீடு கட்டித்தர வேண்டும், மா, முந்திரி, தென்னை, சவுக்கு பயிர்களுக்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. 
தகவலறிந்த வருவாய் துறையினர், காவல் ஆய்வாளர் சுகுணா உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்குவதாக உறுதியளித்தனர். 
இதையடுத்து, உண்ணாவிரதம் பிற்பகலில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், கட்சியின் ஒன்றியச் செயலர் வி. அம்பிகாபதி, நிர்வாகிகள் கோவை. சுப்பிரமணியன், வெற்றிச்செல்வன், இளைய பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com