பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
காவிரியின் கடைமடை பகுதியாக விளங்கி வரும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பம்புசெட் மற்றும் பாசன வாய்க்கால்கள் மூலம் சம்பா சாகுபடி செய்தனர். தற்போது, சீர்காழி பகுதிகளில் பரவலாக சம்பா அறுவடைப் பணிகள் முடிந்துள்ளது. பல்வேறு பகுதியில் மகசூல் நன்றாக இருந்ததாகவும், சில பகுதிகளில் புகையான், கருக்கா தாக்கி விளைச்சல் குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், அகணி, வள்ளுவக்குடி, கொண்டல், கைவிளாஞ்சேரி, கதிராமங்கலம், கற்கோவில், சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோயில், அட்டகுளம், நல்லான்சாவடி, மங்கைமடம், திருவெண்காடு, கீழசட்டநாதபுரம், காரைமேடு, எம்பாவை, நாங்கூர், தென்னலக்குடி, புத்தூர், சோதியக்குடி, ஆரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
இதற்காக நிலத்தை உழுது, நீர்பாய்ச்சி தயார்படுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் தயார் செய்திருந்த நிலத்தில் பருத்தி விதை நட்டு வருகின்றனர். 
இவ்வாறு சீர்காழி பகுதியில் விவசாயிகள் சுமார் 18 ஆயிரம் ஏக்கரில் கோடை பயிரான பருத்தி சாகுபடியில் மேற்கொள்கின்றனர். பருத்தி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக கூறும் விவசாயிகள் 3 மாத மானாவரி பயிரான பருத்தி சாகுபடி நல்ல பலன் கொடுக்கும் என நம்புகின்றனர். ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை பஞ்சு கிடைக்கும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள் கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ரூ. 5 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த ஆண்டு பருத்தி விலை அதிகரித்து தர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com