திருவாவடுதுறை ஆதீனத்தில் மாசி வளர்பிறை சதுர்தசி அபிசேக விழா
By DIN | Published On : 20th February 2019 09:24 AM | Last Updated : 20th February 2019 09:24 AM | அ+அ அ- |

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞானமா நடராஜப் பெருமான் மாசி வளர்பிறை சதுர்தசி அபிசேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமா நடராஜப் பெருமான் சன்னிதியில் 24-ஆவது ஆதீன அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்தார். பின்னர், ஆதீன கொலு மண்டபத்தில் கிருஷ்ணகிரி சுதாகர் ஓதுவாரின் திருமுறை பாராயணம் நடைபெற்றது. இரவு பூஜை நிறைவில் கிருஷ்ணகிரி சுதாகர் ஓதுவாரின் சமய பணியை பாராட்டி அவருக்கு பொற்கிழி ரூ. 5 ஆயிரம் மற்றும் தெய்வ தமிழிசை செல்வர் எனும் விருதினை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் வழங்கினார். இதில், காஞ்சிபுரம் ஆதீன கிளை மடம் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், ஆதீன புலவர் சு. குஞ்சிதபாதம், திருவிடைமருதூர் ஆதீன கிளை மடம் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளர் சண்முகம், காசாளர் சுந்தரேசன், மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள், ஆதீன கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.