சுடச்சுட

  

  தருமையாதீனத்துக்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
  திருக்குவளை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நெல் மகோத்ஸவ விழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை ஸ்ரீ கல்யாணசுந்தரர் வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கிழார் தம்மால் நெல் கிடைத்ததை சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தெரிவித்துக் கொள்ளுதலும், சுந்தரர் நெல் மலையை பார்க்க குண்டையூர் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குண்டையூரில் கிடைத்த நெல்மலையை கோயிலில் கொண்டு சேர்க்க கோளிலியெம் பெருமானிடம் ஆள் வேண்டி திருப்பதிகம் பாடி அருள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை ஸ்ரீ கல்யாண சுந்தரர் பூதங்கணங்களுடன் எழுந்தருளி திருவீதி உலா மேளதாளங்களுடன் குண்டையூர் அடைந்து, குண்டையூர் நெல்மலையை ஆரூராருக்கு சேர்ப்பிக்க பூதகணங்கள் உதவியோடு நெல்மலை இரவு கோயிலை வந்தடைந்தது. 
  இதைத் தொடர்ந்து, பூதகணங்கள் உதவியோடு நெல்மலையை ஆரூர் திருக்கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், திருக்குவளை  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai