முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இரவு நேரங்களில் மணல் திருட்டு
By DIN | Published On : 28th February 2019 09:22 AM | Last Updated : 28th February 2019 09:22 AM | அ+அ அ- |

பொறையாறு அருகே திருவிளையாட்டம் பகுதியில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் திருட்டை சம்பந்தப்பட்ட துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிளையாட்டம் பகுதியில் உள்ள சேர்ந்தவராயன் வாய்க்காலில் புதன்கிழமை சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு அங்குள்ள ஒரு திடலில் குவித்து வைத்திருந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் டிராக்டரில் மணல் திருடியவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மணல் திருடியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பல முறை அரசு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தும் மணல் திருட்டு தொடர்ந்து வருகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.