முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திறன் பயிற்சிகள் வெற்றிப் பாதைக்கு வழிவகுக்கும்
By DIN | Published On : 28th February 2019 09:19 AM | Last Updated : 28th February 2019 09:19 AM | அ+அ அ- |

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் திறன் பயிற்சிகள், இளைஞர்களை வெற்றிப் பாதையில் பயணிக்க வழிவகுக்கக் கூடியவை என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது : தொழில் முனைவோராக சிறக்க நினைக்கும் இளைஞர்கள், திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் பங்கேற்று, அரசு துறைகள் சார்ந்த திட்டங்களில் பயன்பெறும் வழிவகைகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றை நல்ல முறையின் பயன்படுத்திக் கொண்டு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) தெ. பிரகாசம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என். சிவகுமார், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் ப. தாமோதரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ச. ஜீவானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.