முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
By DIN | Published On : 28th February 2019 09:21 AM | Last Updated : 28th February 2019 09:21 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, நாகை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வலிவலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் கே.வி. ராஜேஸ்வரி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜி. பூபதி ஆகியோர் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்யும் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.