முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி
By DIN | Published On : 28th February 2019 09:22 AM | Last Updated : 28th February 2019 09:22 AM | அ+அ அ- |

நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை, உயர்நீதிமன்ற தீர்ப்புரைகள்படி, உரிய அனுமதியுடன் விளம்பரப் பலகைகள் நிறுவுதல் மற்றும் சாலையோரங்களில் சுலோக அட்டைகள் வைத்தல் குறித்த விதிமுறைகளை விளக்கும் கூட்டம் நாகை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அரசுத் துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணிகள் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, நாகையை அடுத்த காடம்பாடி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணிகளை நகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி (பொறுப்பு) உத்தரவின் பேரில், நகரமைப்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான ஊழியர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.