நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

செம்பனார்கோவிலில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமை

செம்பனார்கோவிலில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 48 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ், ரூ. 44.11 கோடி, தமிழக அரசின் மானிய நிதி ரூ. 61.59 கோடி என மொத்தம் ரூ.105.70 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதையொட்டி,  செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் லட்சுமிதேவி, மேற்பார்வை பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com